கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுப்பது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
டிஎஸ்பி படத்தில் கீர்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை விஜய் சேதுபதி மறுத்தார்.;
சென்னை,
விஜய் சேதுபதி தற்போது 'மகாராஜா' படத்தில் நடித்து வருகிறார். இது இவரின் 50 -வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோசன் பணியின்போது பேசிய விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது.
"டிஎஸ்பி படத்தில் கீர்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டேன். ஏனென்றால், உப்பெனா படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்தேன். நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது என்னை அவருடைய உண்மையான தந்தையாக நினைக்கும்படி அவரிடம் கூறினேன். அவர் என் மகனை விட சற்று மூத்தவள். இதனால் நான் முடியாது என்று கூறினேன்." என்றார்.
பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அனுகிரீத்தி வாஸ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.