சிரஞ்சீவியுடனான படம் பற்றி மனம் திறந்த 'ராபின்ஹுட்' இயக்குனர்
இவர் கடந்த 2020-ல் பீஷ்மாவின் வெற்றிக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார்.;

ஐதராபாத்,
சலோ மற்றும் பீஷ்மா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குனர் வெங்கி குடுமுலா, நடிகர் நிதினுடன் காமெடி என்டர்டெய்னரான 'ராபின்ஹுட்' படத்தில் இணைந்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு முன்பு, வெங்கி குடுமுலா கடந்த 2020-ல் பீஷ்மாவின் வெற்றிக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார். இருப்பினும், சில காரணங்களால் அது இறுதியில் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சிரஞ்சீவியுடனான படம் பற்றி வெங்கி குடுமுலா பேசி இருக்கிறார்.
அவர் கூறுகையில், ' சிரஞ்சீவியிடம் ஒரு கதை கூறினேன். ஆனால், அது அவருக்கு முழு திருப்தி கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அது சரியான நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.