அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் மூன்று படங்கள்

விஜய் சேதுபதி நடித்துள்ள மூன்று படங்கள் கோடை கால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளன.;

Update:2025-01-27 16:57 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை 2' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி, கலைப்புலி எஸ் தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்' திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையில், 'கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். நித்யா மேனம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில இந்த மூன்று படங்களும் கோடை கால விடுமுறையை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 3 படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாக உள்ளதால், ரசிகர்கள் இந்த படங்களின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்