கல்வியின் முக்கியத்துவத்தை கூறியுள்ளது 'சார்' படம் - விஜய் சேதுபதி

நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-10-16 09:55 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். இவர் தற்போது 'சார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என தலைப்பிடப்பட்ட இப்படம் தற்பொழுது "சார்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில், திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

அதில் அவர் " கல்வியின் மகத்துவம் , கல்வியின் தேவை, கல்வி என்பது எல்லாருடைய அடிப்படை உரிமை என்பதை ரொம்ப அழகாக சொல்கிற படம் இது. ஒரு குழந்தைக்கு போய் சேருகின்ற கல்வியை தடுத்து நிறுத்துவது அந்த கடவுளாக இருந்தாலும் சரி அது தவறு என்பதை இந்த படம் பேசுகிறது" என படத்தை பாராட்டி பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்