தமனுக்கு நன்றி தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் நாக வம்சி இசையமைப்பாளர் தமனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.;

சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'மேட்'. இது இவர் இயக்கிய முதல் படமாகும். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்தில் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார், கோபிகா உதயன், விஷ்ணு ஓய் மற்றும் கார்த்திகேய சாமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் 2-ம் பாகமான 'மேட் ஸ்கொயர்' உருவாகியுள்ளது. இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர், டாகு மகாராஜ் உள்ளிட்ட படங்களை தாரித்த நாக வம்சி தயாரித்திருக்கிறார். வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தமன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் நாக வம்சி இசையமைப்பாளர் தமனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'என் படத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. மேட் ஸ்கொயரில் உங்களின் அசாதாரண பின்னணி இசைக்கு நன்றி' என்று தெரிவித்திருக்கிறார்.