"டெஸ்ட்" - மாதவனின் கதாபாத்திர வீடியோ வெளியிட்ட சூர்யா
இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.;

சென்னை,
தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நயன்தாரா , மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான் 'டெஸ்ட்' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், மாதவனின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது. இதனை வெளியிட்ட நடிகர் சூர்யா, 'ஆயுத எழுத்து முதல் டெஸ்ட் வரை நடித்த அனைத்து படங்களுக்குமே பெஸ்டை கொடுத்திருக்கிறார் மாதவன். டெஸ்ட் வெற்றிபெற வாழ்த்துகள்' என்று தெரிவித்திருக்கிறார்.