'கலகலப்பு 3' படத்துக்கு ரெடியாகும் சுந்தர் சி
இயக்குனர் சுந்தர் சி 'கலகலப்பு 3' படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'கலகலப்பு'. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகம், 'கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.
இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அடுத்த பாகமான 'கலகலப்பு 3' விரைவில் உருவாகும் என நடிகை குஷ்பு தெரிவித்திருந்தார்.
இரண்டு பாகங்களும் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது கலகலப்பு 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜூலை மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.