'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5 - அப்டேட் கொடுத்த நடிகை
சமீபத்தில், இந்த வெப் தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்புகள் வெளியாகின.;
சென்னை,
ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல், ஹாலிவுட் வெப் தொடருக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது 5-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். சமீபத்தில், இந்த தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்பு வெளியானது. இந்நிலையில், இதில் ராபின் பக்லியாக நடிக்கும் மாயா ஹாக் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'8 எபிசோடுகள் இல்லை, 8 படங்களில் நடித்திருக்கிறேன் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு எபிசோடுகளில் நீளமாக உள்ளன' என்றார்.