'எஸ்டிஆர் 51' படத்துக்காக புதிய தோற்றத்தில் சிம்பு

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'காட் ஆப் லவ்' படத்தில் சிம்பு புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளார்.;

Update:2025-02-04 20:27 IST

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில், அடுத்ததாக சிம்பு 'பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

அதனைதொடர்ந்து, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகாக 'எஸ்டிஆர் 51' என பெயரிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு இது வரை நடிக்க புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்