'மான்ஸ்டர் மெஷின்' இசை ஆல்பத்தின் அனுபவங்களைப் பகிர்ந்த சுருதிஹாசன்
'மான்ஸ்டர் மெஷின்' இசை ஆல்பத்தின் அனுபவத்தைப் நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
நடிகை சுருதிஹாசன் நடிப்பில் கடந்த வருடம் தெலுங்கில் 4 படங்கள் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் டெகாய்ட் மற்றும் சலார் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார். சென்னை ஸ்டோரி என்ற படத்திலும் நடிக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல் பாடல்கள் பாடியும் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
அவர் நடிப்பில் வெளியானவால்டர் வீரய்யா, வீரசிம்மா ரெட்டி, சலார் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை சுருதிஹாசன் தக்க வைத்துள்ளார்.சில மாதங்களுக்கு முன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'இனிமேல்' ஆல்பத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே, சுருதிஹாசன் தன் காதலரான ஷாந்தனு ஹசாரிகாவைப் பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் உறவிலிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் எழுதி, இசையமைத்து, பாடிய 'மான்ஸ்டர் மெஷின்' பாடல் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்ததையொட்டி அதுகுறித்த பதிவொன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். . அதில், "மான்ஸ்டர் மெஷின் வெளியாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. நிறைய அனுபவங்கள். முக்கியமாக, இசையிலிருந்து விடியோ உருவாக்கம் வரை உடனிருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. என் குரல் மற்றும் கனவுகள் வழியாக உலகை தொடர்புகொள்வதற்கான திறனைப் பெற்றிருப்பதில் உள்ள ஆசிர்வாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இத்தனை ஆண்டுகளில் நான் தெரிந்துகொண்டது, எது உங்களை மோசமாக்குகிறதோ அதுவே அழகையும் நேர்மையையும் தருகிறது. இருள் கற்பிப்பது வெளிசத்தின் மீதான நேசத்தையும் நிழலையும்தான். அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.