'புஷ்பா 2': ஸ்ரீலீலாவின் 'கிஸ்ஸிக்' பாடலுக்கு சமந்தா கொடுத்த ரியாக்சன்
'புஷ்பா 2' படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார்.;
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். இப்படம் மட்டுமில்லாமல், இதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக ஊ சொல்ரியா பாடல்.
இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா 2 தி ரூல்' உருவாகி உள்ளது. இதில், சிறப்பு பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார். கிஸ்ஸிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் நேற்று வெளியானது.
இந்நிலையில், 'கிஸ்ஸிக்' பாடலுக்கு சமந்தா ரியாக்ட் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஸ்ரீலீலா பிரமாதபிப்sபடுத்திவிட்டார். புஷ்பா 2-வுக்காக காத்திருங்கள்' இவ்வாறு பதிவிட்டுள்ளார். புஷ்பா 2: தி ரூல் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.