போர் நினைவிடத்திற்கு சென்ற சாய்பல்லவி...அமரனுக்கு முன் இதை செய்ய விரும்பினேன்!
மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்ற நடிகை சாய் பல்லவி அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. மேலும் இப்படம் வரும் தீபாவளி அன்று 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் மேஜர் முகுந்த வரதராஜனின் உண்மை உண்மையான வாழ்க்கை கதை என்பதனால் அவரது மனைவி இந்துவும் பட புரமோஷன் பணியில் கலந்து கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், நடிகை சாய் பல்லவி அமரன் படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் முன்னரே, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ள மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோரின் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்த புகைப்படங்களை நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'அமரனுக்கான புரமோஷன் பணிகளை தொடங்கும் முன் தேசியப் போர் நினைவிடத்தைப் பார்க்க விரும்பினேன். நமக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக இருக்கும் இந்த கோவிலில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன்" என குறிப்பிட்டு இருந்தார்.