'அமரன்' படத்திற்காக முதல் முறையாக இந்த விஷயத்தை செய்த சாய்பல்லவி

10 வருடங்களாக சினிமாவில் உள்ள சாய்பல்லவி, 'அமரன்' படத்திற்காக முதல்முறையாக ஒரு விஷயத்தை செய்துள்ளார்.;

Update:2024-10-30 15:18 IST
Sai Pallavi did this for the first time for the film Amaran

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. இப்படத்தில் இவர் நடித்திருந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தியா, தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்தார். இவ்வாறு 10 வருடங்களாக சினிமாவில் உள்ள சாய்பல்லவி, தற்போது நடித்துள்ள அமரன் படத்திற்காக முதல்முறையாக ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

அது என்னவென்றால், தனது எந்த படத்திற்கும் இந்தியில் டப்பிங் பேசாத சாய்பல்லவி இப்படத்திற்காக இந்தியில் முதல்முறையாக டப்பிங் பேசியுள்ளார் என்பதுதான். நடிகை சாய்பல்லவி, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படம் நாளை தீபாவளியன்று வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்