'கங்குவா' படம் வெளியாவதில் சிக்கல் - தயாரிப்பு நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-11-11 16:40 GMT

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'கங்குவா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற ரூ.20 கோடியை வருகிற 13-ம் தேதிக்குள் ஐகோர்ட்டு சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்