கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படத்தில் இணைந்த ஆஸ்கர் விருது வென்ற நடிகை?

இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்சில் வெளியாக உள்ளது.

Update: 2024-11-26 12:04 GMT

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில், மேட் டாமன், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தில், அன்னே ஹாத்வே மற்றும் ஜெண்டயா ஆகியோர் இணைந்தனர். அன்னா ஹாத்வே இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், 2003-ம் ஆண்டு வெளியான 'மான்ஸ்டர்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற சார்லிஸ் தெரோன், இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில், நோலனுடன், தெரோன் பணியாற்றும் முதல் படமாக இது இருக்கும். இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்சில் வெளியாக உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்