'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.;

Update:2024-08-30 18:46 IST

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்,து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். 

கோல்டன் ஸ்பேரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். பாடல் புது வைப் செய்யும் விதமாக அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்