'ஹரி ஹர வீர மல்லு படம்' பற்றிய சுவாரசிய தகவலை பகிர்ந்த நிதி அகர்வால்
ஹரி ஹர வீர மல்லு படம் குறித்த சில சுவாரசியமான தகவலை நிதி அகர்வால் பகிர்ந்துள்ளார்.;

சென்னை,
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். இவர் தெலுங்கில் 'சவ்யசாச்சி' திரைப்படத்திலும், தமிழில் 'ஈஸ்வரன்' திரைப்படத்திலும் அறிமுகமானார்.
ஐஸ்மார்ட் ஷங்கர் மற்றும் கலக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' படத்திலும் , பவன் கல்யாணுடன் 'ஹரி ஹர வீரமல்லு' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதில், 'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியானநிலையில், 'எம்மனச பறிச்சுட்ட'என்ற பாடல் வருகிற 24-ம் தேதி மதியம் 3.00 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஹரி ஹர வீர மல்லு படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை நிதி அகர்வால் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு சிறிய காட்சிதான். படத்தில் நீங்கள் ஆச்சரியப்படும் படியான பல காட்சிகள் உள்ளன. எனது கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சமி எனது சிறந்த கதாபாத்திரம், ஹரி ஹர வீர மல்லு எனது சிறந்த படம்' என்றார்.