அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நயன் சரிகா

நடிகை நயன் சரிகா, இதுவரை 3 படங்களில் நடித்துள்ளார்.;

Update:2024-11-08 08:04 IST

சென்னை,

தெலுங்கு திரைப்பட நடிகையான நயன் சரிகா, இதுவரை 3 படங்களில் நடித்துள்ளார். அதில், ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியான "கம் கம் கணேஷா" இவரது முதல் படமாகும். காமெடி திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து, இளம் நடிகை நயன் சரிகா, 'அய்' படத்தில் நடித்திருந்தார். கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில், பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த நயன் சரிகாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

இப்படத்தையடுத்து, தனது 3-வது படமாக 'கா' படத்தில் நடித்திருந்தார். இதில், சத்யபாமா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார். குறிப்பாக இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளார். கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

முதல் படம் தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த இரண்டு ஹிட் படங்களை கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார் நயன் சரிகா. இவ்வாறு இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளதால், நயன் சரிகாவுக்கு அடுத்தடுத்து அதிக வாய்ப்புகள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்