குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம்...தற்போது முன்னணி நடிகரின் மனைவி

அவர் 2006-ல் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.

Update: 2024-08-12 22:34 GMT

image courtecy;instagram@nazriyafahadh

சென்னை,

பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த தென்னிந்திய இளம் நடிகை. அவர் 2006-ல் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவர் ஒரு காலத்தில் தனது கணவருக்கும் தனக்குமான வயது இடைவெளிக்காக டிரோல் செய்யப்பட்டார். ஆனால் அவர்களின் காதல் இவற்றை வலிமையுடன் எதிர்கொண்டது. நாம் தற்போது நஸ்ரியா பற்றி பேசுகிறோம்.

நஸ்ரியா டிசம்பர் 20, 1994 -ல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அவர் ஓன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும், திருவனந்தபுரத்தில் உள்ள கிறிஸ்ட் நகர் பள்ளியிலும் முடித்தார்.

2006-ம் ஆண்டு பிளெஸ்ஸி இயக்கிய 'பாலுங்கு' என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பைத் தொடங்கினார் நஸ்ரியா. அதில் மம்முட்டியின் மகள் கீதுவாக நடித்தார். இவர் தமிழில், 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் 2014-ல் நஸ்ரியா மலையாள படமான 'ஓம் சாந்தி ஓஷானா'வில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதனைத்தொடர்ந்து வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தார்.

இதில் இருவருக்கும் காதல் மலர்ந்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். பலர் நஸ்ரியா மற்றும் பகத்தின் வயது வித்தியாசத்தை விமர்சித்தனர். இருப்பினும், அவர்கள் இதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காதலை கொண்டு இவற்றையெல்லாம் வலிமையுடன் எதிர்கொண்டனர். தற்போது பகத் பாசில் -நஸ்ரியா மலையாளத் துறையில் அழகான ஜோடிகளில் ஒன்றாக உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்