பிரபாஸின் 'தி ராஜா சாப்' ரிலீஸ் எப்போது? - மவுனம் கலைத்த இயக்குனர்
மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.;
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் பிரபாஸ், மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இயக்குனர் மாருதி இது குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,
''தி ராஜா சாப்' படத்தின் ஒரு சிறிய பகுதி மற்றும் பாடல்கள் மட்டுமே மீதம் உள்ளன. பாடல்கள் நிச்சயமாக ரசிகர்களை மகிழ்விக்கும். நிறைய தொழில்நுட்ப வேலைகளும் மீதம் உள்ளன. ரிலீஸ் தேதியைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர்கள் அதை சரியான நேரத்தில் அறிவிப்பார்கள்' என்றார்.