'ராட்சசன்' இயக்குனரின் புதிய படத்தில் மமிதா பைஜு - வெளியான முக்கிய அப்டேட்

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2025-03-15 13:08 IST
Mamitha Baiju-Vishnu Vishal in the Ratsasan director next film

சென்னை,

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. இப்படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மமிதா பைஜுவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அதன்படி, மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ரெபல்' படத்தில் அறிமுகமானார். தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.

அதன்படி, 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம் குமார் இயக்கும் புதிய படத்தில் மமிதா நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இதன் மூலம் ராம் குமாருடன் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்