தெலுங்கிற்கு 'பாகுபலி' போல, தமிழ் சினிமாவிற்கு 'கங்குவா' - இயக்குனர் சுசீந்திரன்

அனைவரும் குடும்பத்துடன் சென்று கங்குவா திரைப்படத்தைப் பாருங்கள் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-19 11:36 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11500 திரையரங்குகளில் கடந்த 14-ந் தேதி வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதாவது பழங்குடியின மக்களில் ஒருவனாகவும், மற்றொன்றில் ஸ்டைலிஷான தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

படத்தில் அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இத்திரைப்படத்தில் நடித்த சூர்யாவை பலர் விமர்சித்து வரும் நிலையில், நடிகை ஜோதிகா மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளுடன் படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் படத்தை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "நேற்று மாலை என் குழந்தைகளுடன் "கங்குவா" திரைப்படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் இது, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் சிவா இயக்குனர் அவர்கள், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், சூர்யா சாரின் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. அனைத்து துறைகளிலும் உலகத் தரத்துக்குத் தமிழில் இந்த கங்குவா, தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள், அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தைப் பாருங்கள் " கங்குவா" உங்களை மகிழ்விப்பான்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்