இயக்குனர் ஜோஜு ஜார்ஜின் 'பணி' படத்தைப் பாராட்டிய கமல்

இயக்குனர் ஜோஜு ஜார்ஜ் தன் படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றுள்ளார்.

Update: 2024-11-21 10:34 GMT

ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யா - 44 மற்றும் கமலுடன் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ், பணி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்தும் உள்ளார். நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 24ம் தேதி வெளியானது. மலையாளத்தில் உருவான 'பணி', இந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாக இருக்கிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக ரீதியாக வெற்றிப்படமாகியுள்ளது.

நடிகரும் இயக்குனருமான ஜோஜு ஜார்ஜ் சமீபத்தில் திரை விமர்சகர் ஒருவரை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'பணி' தமிழாக்கத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் மற்றும் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ், நாயகி அபிநயா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

திரைப்படம் தமிழில் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழு நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அப்பொழுது எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்