சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'கல்கி 2898 ஏடி'

பூசன் திரைப்பட விழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2024-09-28 01:43 GMT

சென்னை,

பூசன் சர்வதேச திரைப்பட விழா தென் கொரியாவில் உள்ள ஹயுண்டே-குவின் பூசானில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் முதல் விழா கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற்றது. இது ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பூசன் திரைப்பட விழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த 'கல்கி 2898 ஏடி' படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இத்திரைப்படத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர். 

கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், உலகம் முழுவதும் ரூ,1,200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளங்களில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்