'லவ் டுடே'படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் மகன், ஸ்ரீதேவி மகள் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'லவ் டுடே' தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.;

Update:2024-12-28 06:47 IST
Junaid Khan and Khushi Kapoors next titled Loveyapa, to release in 2025

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'லவ்யப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏஜிஸ் நிறுவனம் மற்றும் பேண்டம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்