இன்ஸ்டாவில் இருந்து மனைவியின் புகைப்படங்களை நீக்கிய ஜெயம் ரவி
ஜெயம் ரவி இன்ஸ்டாகிராமிலிருந்த மனைவி ஆர்த்தியின் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.;
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், இதற்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ' நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை தகர்ப்பதற்காக இப்படி பேசுகின்றனரா என்று தெரியவில்லை. அப்படி பேசுவது மிகவும் தவறு. நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்,' என்றார்.
சில மாதங்களுக்கு முன் ஆர்த்தி தன் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்த ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கினார். இதுவே, சந்தேகத்திற்கு வழி வகுத்தலும் ஜெயம் ரவியின் கணக்கில் அவரும், ஆர்த்தியும் இருக்கும் புகைப்படங்கள் அப்படியே இருந்தன. ஆனால், ஜெயம் ரவி தன் இன்ஸ்டாகிராம் கணக்கை மனைவியின் குடும்பத்தினரே நிர்வகித்து வந்ததாகக் கூறினார். தற்போது, ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்த மனைவி, மகன்களின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளது. இறுதியாக, அவர் பதிவிட்ட தன் புகைப்படத்துடன், 'புதிய நான்' எனக் குறிப்பிட்டுள்ளார்.