'தாமதம் ஆகவில்லை' - தாயாவது குறித்து பேசிய சமந்தா
'சிட்டாடல் ஹனி பன்னி' வெப் தொடரில் சமந்தாவின் மகளாக காஷ்வி மஜ்முந்தர் நடித்திருந்தார்.;
சென்னை,
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
தற்போது சமந்தா 'சிட்டாடல் ஹனி பன்னி' என்ற பாலிவுட் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இது கடந்த 7-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இதில் சமந்தாவின் மகளாக காஷ்வி மஜ்முந்தர் நடித்திருந்தார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தாயாவது குறித்து சமந்தா பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
'தாயாக வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அது மிகவும் அழகான அனுபவம். நான் அதற்காக காத்திருக்கிறேன். மக்கள் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் அதற்கு இன்னும் தாமதம் ஆகவில்லை. தாயாக முடியாத காலம் என்பது நமது வாழ்வில் இல்லை என்று நினைக்கிறேன்' என்றார்.
மேலும், காஷ்வி மஜ்முந்தர் உடன் நடித்தது குறித்து பேசுகையில், 'குழந்தை நட்சத்திரத்துடன் பணிபுரிந்தது ஒரு நம்பமுடியாத அனுபவம். நான் என் மகளுடன் பழகுவதுபோல் உணர்ந்தேன்' என்றார்.