'அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு' - ரிது வர்மா
இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.;

சென்னை,
தமிழில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'நித்தம் ஒரு வானம்', 'மார்க் ஆண்டனி' உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், நடிகை ரிது வர்மா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் 'துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்திருக்கிறார்.
தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் சந்தீப் கிஷன், ராவ் ரமேஷ், அன்ஷுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். திரிநாத் ராவ் நக்கினா இயக்கி உள்ள இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை ரிது வர்மா கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஆக்சன் சார்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். அதேபோல் நகைச்சுவை வேடத்திலும் நடிக்க வேண்டும். மேலும், வரலாற்று படத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு' என்றார்.