'இவர்தான் பகத் பாசிலா...?' - புஷ்பா 2 குறித்த பிரபல நடிகையின் பதிவு வைரல்

புஷ்பா 2 படம் இதுவரை ரூ.829 கோடி வசூலித்துள்ளது.

Update: 2024-12-10 06:04 GMT

சென்னை,

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 5-ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இப்படம் வெளியாகி இதுவரை ரூ.829 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகை ருஹானி சர்மா புஷ்பா 2 திரைப்படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்றிருக்கிறார்.

அப்போது பகத் பாசிலை அடையாகம் காண முடியாமல் தனது சகோதரரிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி உள்ளது. அதன்படி, அந்த பதிவில், 

'நான் பகத் பாசிலின் தீவிர ரசிகை. புஷ்பா 2 படத்தில் அவரது வருகைக்காக மிகவும் ஆர்வமாக காத்திருந்தேன். அதுவும் இறுதியில் நடந்தது. ஆனால் அவரை உடனடியாக என்னால் அடையாளம் காண முடியவில்லை.

என் சகோதரரிடம் இவர்தான் பகத் பாசிலா என்று கேட்டுதான் தெரிந்து கொண்டேன். இதுதான் அவரிடம் உள்ள மேஜிக். அந்த அளவிற்கு பகத் பாசில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை வித்தியாசமான உருமாற்றம் செய்து கொள்கிறார். அவரை திரையரங்கில் பார்ப்பது எப்போதுமே ஒரு விருந்துதான்' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்