திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை அறிமுகம்
மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் புதிய சான்றளிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை,
மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களுக்கு 'யு', 'ஏ', மற்றும் 'யுஏ' ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது. இந்நிலையில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க புதிய சான்றளிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, யு வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும், ஏ வகை திரைப்படங்கள் 18 வயது கடந்தவர்களுக்கு மட்டும் என முன்பு இருந்த நடைமுறையுடன் தற்போது 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக யுஏ7+, யுஏ 13+, யுஏ 16+ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு, ஒரு திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரத்தை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.