'எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால்...' - நடிகை சமந்தா
இதுவரை நடிகையாக மட்டுமே வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.;
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இதுவரை நடிகையாக மட்டுமே வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அதன்படி, சமந்தா தனது சொந்தமாக தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் கீழ் "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர்.
இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், புரமோசனில் கலந்துகொண்டு பேசிய சமந்தா, தனது முதல் 2 படங்களை பார்க்கும்போது மிகவும் வெட்கமாக உள்ளதாக கூறினார்.
சமந்தா கூறுகையில், "எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால், எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என்று யோசிக்கிறேன். ஆனால் 'சுபம்' படத்தில், இந்த இளம் நடிகர்களின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்' என்றார்.