'எனக்கு நானே சவால் விட விரும்புகிறேன் '- பூஜா ஹெக்டே

தனது சினிமா வாழ்க்கை அனுபவத்தை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.;

Update:2025-01-07 07:09 IST

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ள இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இதில், தேவா படம் வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தனது சினிமா வாழ்க்கை அனுபவத்தை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'என்னை பொறுத்தவரையில், படங்களில் ஒரு பகுதியாக இருப்பதை விட , அந்த கதாபாத்திரமாகவே வாழ்வதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியுமோ என்பதை தாண்டி எனக்கு நானே சவால் விட விரும்புகிறேன். என்னைத் தேடி வரும் அதுபோன்ற வாய்ப்புகளுக்காக நன்றியோடு இருக்கிறேன். இன்னும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. அதற்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்