ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

மும்பை,
பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'வார்'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அதனையடுத்து, யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் 'வார் 2' படத்தை தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக நடிக்கிறார். இந்த படத்தை 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.