'ஹிட் 3' படத்தின் இரண்டாவது பாடல் எப்போது? - நானி அறிவிப்பு

இப்படத்தின் முதல் பாடலான 'காதல் வெல்லுமா' வெளியாகி வைரலானது.;

Update:2025-04-09 06:53 IST

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான 'காதல் வெல்லுமா' வெளியாகி வைரலானது. இதனையடுத்து, 2-வது பாடல் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திரந்த ரசிகர்களுக்கு நானி அதற்கான அறிவிப்பை பகிர்ந்துள்ளார். அதன்படி, 'அப்கி பார் அர்ஜுன் சர்க்கார்' என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்