'வெந்து தணிந்தது காடு 2 உருவாகாததற்கு இதுதான் காரணம்' - கவுதம் மேனன்
சிம்பு நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு’;

சென்னை,
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான படம் வெந்து தணிந்தது காடு. சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் கடந்த 2022 -ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று குறிப்பிடதக்க வசூலை பெற்றது. இப்படம் தெலுங்கில் தி லைப் ஆப் முத்து என்ற பெயரில் வெளியானது. இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், 'வெந்து தணிந்தது காடு 2 உருவாகாததற்கான காரணத்தை கவுதம் மேனன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"வெந்து தணிந்தது காடு 2ம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டோம். ஆனால் படம் வெளியான 25 நாட்களுக்குப் பிறகு, சிம்பு ஆர்வத்தை இழந்தார். அதனால் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை 'என்றார்.