'தி டார்க் ஹெவன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.;

Update:2024-11-04 19:20 IST

சென்னை,

நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல், சங்கர் இயக்கிய 'பாய்ஸ் 'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 -ம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் நகுல் நடிக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'. டீம் பி புரொடக்சன் ஹவுஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நகுல் நடிக்கிறார். ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.

இந்த நிலையில், தி டார்க் ஹெவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை சசிகுமார், பரத் மற்றும் சிபிராஜ் உள்ளிட்டோர் வெளியிட்டனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்