'மெய்யழகன்' படத்தை பார்த்து அழுத பிரபல பாலிவுட் நடிகர்

கார்த்தியுடன் முதல் முறையாக அரவிந்த் சாமி நடித்த படம் மெய்யழகன்.

Update: 2024-12-08 07:26 GMT

Image Courtecy: Twitter@Netflix India South

மும்பை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவரின் 27-வது படமாக உருவானது 'மெய்யழகன்'. இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படியாக உருவான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

அந்த வகையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மெய்யழகன் படத்தை பார்த்து சமூகவலைதளப்பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், 'மெய்யழகன் படத்தை பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம். அழகாக, எளிமையாக இருந்தது.

படம் என்னை நிறைய அழுக வைத்தது. என் நண்பர் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி சிறப்பாக நடித்திருக்கின்றனர். படத்தின் ஒவ்வொரு துறையிலும் குழுவினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக இயக்குனர் பிரேம் குமார்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்