பிரபாஸ், அல்லு அர்ஜுனுக்கு 'நோ' சொல்லும் பிரபல நடிகை ?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்.

Update: 2024-12-08 03:40 GMT

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன். பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படங்கள் அவர்களை பான் இந்திய நட்சத்திரமாக உயர்த்தியது. இவர்களுடன் நடிக்கும் பொன்னான வாய்ப்புக்காக பல நடிகைகளை காத்திருக்கின்றனர்.

இருப்பினும் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகளை நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க அவரைத் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் ஷ்ரத்தா கபூர் தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருவதால் அதை மறுத்துவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஷ்ரத்தா கபூர், கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்