'அனிமல்' பட நடிகைக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் பகத்பாசில்?

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் பகத்பாசில் வில்லனாக நடித்துள்ளார்.

Update: 2024-12-05 04:52 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள திரையுலகம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார் பகத் பாசில்.

தற்போது அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பகத்பாசில் 'அனிமல்' பட நடிகைக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 'ஜப் வி மெட்', 'ராக்ஸ்டார்', 'ஹைவே', 'அமர் சிங் சம்கிலா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இம்தியாஸ் அலி இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும், அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை திரிப்தி டிம்ரி இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பகத்பாசில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்