'லப்பர் பந்து' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குனர் பா. ரஞ்சித்

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Update: 2024-09-22 15:04 GMT

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படக்குழுவை பாராட்டியிருந்தார். பின்பு சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ்,வெற்றிமாறன் ஆகியோர் பாராட்டியிருந்தனர்.பாராட்டிய வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது படத்தை பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.திரைப்படம் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. பார்க்கிங் திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புக் மை ஷோ வில் மட்டும் 46 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்