அடுத்த ஹாலிவுட் படத்தில் தனுஷ்...ஜோடியாக பிரபல ஹாரர் பட நடிகை?

நடிகர் தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.

Update: 2024-12-10 01:26 GMT

சென்னை,

தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதன்படி, நடிகர் தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ஆண்டனி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கிய 'தி கிரே மேன்' படத்தில் நடித்தார்.

இந்நிலையில், மீண்டும் தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சோனி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 'ஸ்ட்ரீட் பைட்டர்' படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில், சமீபத்தில் ஹாரர் கதைக்களத்தில் வெளியான 'இம்மாகுலேட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த சிட்னி ஸ்வீனி தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் தனுஷ் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்