பெஞ்சல் புயல்: ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி

பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.

Update: 2024-12-08 14:25 GMT

சென்னை,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கடந்த 1-ந் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெஞ்சல் புயல் கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உழவன் பவுண்டேஷன் சார்பாக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்