'பிளாஸ்ட் '- 'எல் 2 எம்புரான்' பட டிரெய்லரை பார்த்த அனிருத் பதிவு
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.;

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் தற்போது 'லூசிபர்'படத்தின் 2-ம் பாகத்தில் ந்டித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லாலுடன், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், பிருத்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரை முன்னதாக ரஜினிகாந்த் பாராட்டினார். இந்நிலையில், அனிருத்தும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இது தொடரபாக அவர் பகிர்ந்த பதிவில், ' எம்புரான்' டிரெய்லர் பிளாஸ்ட். மோகன்லால், பிருத்விராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்' என்று தெரிவித்திருக்கிறார்.