காதலியை கரம்பிடித்த 'பிக்பாஸ்' பிரதீப் ஆண்டனி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனியின் திருமணம் இன்று நடைபெற்றது.;
சென்னை,
'பிக்பாஸ்' பிரதீப் ஆண்டனி அருவி, வாழ், டாடா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகர் கவினும் நெருங்கிய நண்பர்கள். நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு பூஜா என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அதிக வரவேற்பை பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, சில காரணங்களால் அதிரடியாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பிரதீப்பின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், பிரதீப் ஆண்டனி தன் காதலியான பூஜாவை இன்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.