வைரலாகும் 'சிக்கந்தர்' படத்தின் 2-வது பாடல்

இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.;

Update:2025-03-14 06:07 IST

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கதாநாயகனாக சல்மான்கான் நடித்துள்ள படம் 'சிக்கந்தர்' படத்தில். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இதன் மூலம் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில், தற்போது 2-வது பாடல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'பாம் பாம் போலே' என்ற இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மதராஸி' எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்