மழையால் ஒத்திவைக்கப்பட்ட அசோக் செல்வன் படத்தின் ரிலீஸ்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'.;

Update:2024-11-13 14:48 IST
Ashok selvans film release postponed due to rain

சென்னை,

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருமலை தயாரித்துள்ள இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த திரைப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருவதால் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்