அர்ஜுன் தயாரித்து இயக்கும் புதிய படம் 'சீதா பயணம்'

ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சொல்லிவிடவா'.

Update: 2024-10-16 13:22 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர் 1992-ல் வெளியான 'சேவகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கியிருந்தார். இந்தநிலையில் 6 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இயக்குனர் ஆகிறார் அர்ஜுன்.

இந்தநிலையில், அவர் இயக்கும் புதிய படத்துக்கு 'சீதா பயணம்' என பெயரிடப்பட்டுள்ளது. தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இவரது மகள் ஐஸ்வர்யா இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. அர்ஜுன் நடிப்பில் அடுத்ததாக 'விடாமுயற்சி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்