மதராஸியை இந்த பிளாக்பஸ்டர் படத்துடன் ஒப்பிடும் ஏ.ஆர்.முருகதாஸ்

'மதராஸி' படம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துகொண்டார்.;

Update:2025-03-23 08:29 IST
AR Murugadoss compares Madharasi to this cult classic blockbuster

சென்னை,

சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இந்தி படத்தை இயக்கி இருக்கிறார். சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இதில், சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மறுபுறம் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராஸி' என்ற படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில், 'மதராஸி' படம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டார்.

"மதராசி ஒரு ஆக்சன் படம், மேலும் இது கஜினியின் பாணியில் இருக்கும். படப்பிடிப்பு சுமார் 22 நாட்கள் மீதமுள்ளது. அடுத்த மாத மத்தியில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்