நடிகைகள் நோரா பதேகி, தமன்னாவுக்கு 'நோ' சொன்ன பிரபல பாடகர்கள்

பிரபல பாடகர்களான அனுப் ஜலோட்டா, சங்கர் மகாதேவன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-07 12:00 GMT

சென்னை,

பிரபல பாடகர்களான அனுப் ஜலோட்டா, சங்கர் மகாதேவன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இம்மாத இறுதியில் டெல்லி, அகமதாபாத் மற்றும் இந்தூரில் இவர்களின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள நோரா பதேகி மற்றும் தமன்னா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அனுப் ஜலோட்டா, சங்கர் மகாதேவன் மற்றும் ஹரிஹரன் ஆகிய மூவரும் அவர்களை அழைக்க 'நோ' சொல்லி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 'சிறப்பு விருந்தினராக யாரையாவது அழைப்பதாக இருந்தால், அது ஒரு நடிகராகவோ, நடிகையாகவோ இல்லாமல், நிகழ்ச்சியின் உணர்வோடு ஒத்துப்போகும் சக பாடகராக இருக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்