ரசிகர் சொன்ன ஒரு வார்த்தை...கடும் கோபமடைந்த புஷ்பா பட நடிகை

சின்னத்திரையில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அனசுயா .;

Update:2025-03-16 08:48 IST
Anasuya Bharadwaj confronts a fan for calling her aunty!

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனசுயா பரத்வாஜ், சின்னத்திரையில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் அனசுயா, கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், நடிகை அனசுயா பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து, பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஐதராபாத்தில் நடந்த ஹோலி நிகழ்வில் அனசுயா பங்கேற்றார்.

அப்போது மேடையில் இருந்த அனசுயாவை ரசிகர் ஒருவர் ஆன்டி என்று அழைத்தார். இதனை கேட்டு கடும் கோபமடைந்த அனசுயா, துணிச்சல் இருந்தால் மேடைக்கு வா என்றும் , தன்னைத் தூண்டிவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை காட்டுவேன் என்றும் எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்